மலேசிய எஃப்1 போட்டி நிறுத்தப்படலாம்

மலேசிய எஃப்1 போட்டி நிறுத்தப்படலாம்

1 mins read

கோலாலம்பூர்: விரைவு கார் பந்தயமான எஃப்1 போட்டி மலேசி யாவில் 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு நடக்காமல் போகலாம். போட்டியை நடத்துவதற்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே போவதும் நுழைவுச் சீட்டு விற்பனை சரிந்துகொண்டே வருவதும், போட்டி நடைபெறும் மற்ற இடங்களிலிருந்து வரும் போட்டியுமே அதற்குக் காரணம் என்று செப்பாங் அனைத்துவலகத் தடத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரஸ்லான் ரசாலி கூறினார்.

போட்டியைத் தொலைக்காட்சி யில் பார்ப்போரின் எண்ணிக் கையும் சரிந்து வருகிறது. அதனால் எஃப்1 அதிகாரிகள் மலேசியப் போட்டியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இவ்வாரம் கூடவிருக்கின்றனர். போட்டியை நடத்த 2018ஆம் ஆண்டு வரை குத்தகை வழங்கப் பட்டுள்ளது. "இந்தப் போட்டியால் மலேசியா வுக்குப் பொருளியல் நன்மை கிட்டாவிட்டால் அதனைத் தொடர்ந்து நடத்துவதில் அர்த்த மில்லை," என்றும் திரு ரசாலி கூறினார். 120,000 பேர் அமரக்கூடிய செப்பாங் அரங்கில் கடந்த மாதப் போட்டியின்போது 45,000 பார் வையாளர்கள் மட்டுமே திரண் டிருந்தனர்.