லண்டன்: யர்கன் கிளோப்பின் தலைமையின்கீழ் லீக் பட்டத்துக்கான போட்டிக்கு லிவர்பூல் தயாராக இருக்கிறது என்று மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் நிர்வாகி அலெக்ஸ் ஃபெர்குசன் தெரிவித்துள்ளார். கிளோப்பின் நிர்வாகத்தின்கீழ் லிவர்பூல் பல மடங்கு முன்னேறியுள்ளதாக அவர் கூறினார். இந்தப் பருவத்தில் இதுவரை களமிறங்கிய 12 ஆட்டங்களில் ஒன்பது ஆட்டங்களை லிவர்பூல் கைப்பற்றியுள்ளது. லீக் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல் முதல் இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டியுடன் ஒப்பிடுகையில் கோல் வித்தியாசத்தில் மட்டுமே பின்தங்கி உள்ளது. "கிளோப் சிறப்பாகச் செயல் பட்டு லிவர்பூலுக்கு மீண்டும் உயிரூட்டியுள்ளார்," என்று சிறந்த நிர்வாகியாக முத்திரை பதித்த ஃபெர்குசன் கூறினார்.
'போட்டிக்கு லிவர்பூல் தயார்'
1 mins read

