புதுடெல்லி: இம்மாதம் 15ஆம் தேதி தொடங்கும் சீன சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் களமிறங்குகிறார். இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்படும் இலக்கோடு அவர் பெங்களூரில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் முழங்கால் காயம் காரணமாக லீக் சுற்றுடன் வெளியேறிய சாய்னா நேவால் சீன சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் முத்திரை பதிக்கவேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறார்.
"இந்தியாவில் பயிற்சிக்கான வசதிகளுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால் சீனாவைப் போல் எங்களுக்குப் போதிய அளவுக்கு பேட்மிண்டன் பயிற்சிக் கழகங்களும் பயிற்றுவிப் பாளர்களும் இல்லை. நாட்டின் பெரிய நகரங்களில் குறைந்த பட்சம் 20 முதல் 30 பயிற்று விப்பாளர்கள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு அதிகபட்சமாக ஒரு நகரத்தில் 2 முதல் 3 பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்திய பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டி மூலம் அதிக அளவி லான வீரர்கள் பேட்மிண்டன் ஆட்டத் தை நோக்கி ஈர்க்கப் பட்டிருப்பது பாராட்டுக் குரியது," என்றார் சாய்னா.

