எதிர்பாரா வெற்றியைச் சுவைத்த மலேசிய மகளிர் ஹாக்கி அணி

எதிர்பாரா வெற்றியைச் சுவைத்த மலேசிய மகளிர் ஹாக்கி அணி

1 mins read

செங்காங் ஹாக்கி விளையாட்டரங் கத்தில் நடைபெற்று வரும் மகளிருக் கான ஆசிய ஹாக்கி வெற்றியாளர் போட்டியில் நேற்று முன்தினம் நடை பெற்ற ஆட்டத்தில் யாரும் எதிர் பார்க்காத வகையில் பலம் பொருந்திய ஜப்பானை மலேசியா 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை மலேசியா நெருங்கியுள்ளது. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தமது வீராங்கனைகளை மலேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் கே. தர்மராஜ் வெகுவாகப் பாராட்டினார்.

தங்களுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்ட மலேசியாவுக்கு (நீல நிற சீருடை) இறுதி வரை பதிலடி கொடுக்க முடியாமல் ஜப்பான் அணி தோல்வியைத் தழுவியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்