நெய்மார் அரை சதம்

நெய்மார் அரை சதம்

1 mins read
3a75bcdc-a577-4495-b1ea-fcc35459c398
-

பெலோ ஹரிஸான்டே: சொந்த மண்ணில் கடந்த முறை நடந்த உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் 7-1 என படு மோசமாகத் தோற்று வெளியேறிய அதே பெலோ ஹரிஸான்டே விளையாட்டரங்கில் அர்ஜெண்டி னாவை 3-0 எனத் தோற்கடித்து பிரேசில் காற்பந்து அணி ஆறுதல் தேடிக்கொண்டது. அணித் தலைவர் நெய்மார் அனைத்துலகப் போட்டிகளில் தமது 50வது கோலை அடித்தது இந்த ஆட்டத்தின் சிறப்பம்சம். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கொட்டினியோ பிரேசிலின் கோல் கணக்கைத் தொடங்கி வைக்க, 58வது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் பௌலினியோ அதை மூன்றாக உயர்த்தினார்.

கேப்ரியல் ஜீசஸ் (வலது) ஆகியோருடன் இணைந்து இப்படி வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரேசிலின் நெய்மார். படம்: ஏஎஃப்பி