சுசுகி கிண்ணக் காற்பந்து: சிங்கங்களுக்கு ஒவ்வோர் ஆட்டமும் சவால் மிக்கது

சுசுகி கிண்ணக் காற்பந்து: சிங்கங்களுக்கு ஒவ்வோர் ஆட்டமும் சவால் மிக்கது

1 mins read
2f89dc41-3e65-4ab2-b6d6-ad48bece937d
-

பெரும் சர்ச்சைக்கு இடையில் தனது சுசுக்கி கிண்ணக் காற்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் சமநிலை கண்டது சிங்கப்பூர். இவ்வாண்டின் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் இரு நாடுகளில் ஒன்று பிலிப்பீன்ஸ். மற்றொன்று மியன்மார். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிலிப்பீன்ஸை எதிர்த்து களம் இறங்கியது சிங்கப்பூர். பயிற்று விப்பாளர் வீ. சுந்தரமூர்த்தியின் உத்திகளுக்கு ஏற்ப சிங்கப்பூர் அணி ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முற்படும் நேரத்தில் சிங்கப்பூருக்குப் பேரிடியாக அமைந்தது அக்குழுவிற்குக் கிடைத்த சிவப்பு அட்டை.

பந்தைத் தன்வசப்படுத்துவதற்காக சிங்கப்பூரின் ஹஃபிஸ் அபு சுஜாட் தனது காலை உயர்த்தியபோது அங்கே பந்தைத் தலையால் முட்ட முயன்ற பிலிப்பீன்ஸ் ஆட்டக்காரரின் முகத்தில் அவரது கால் பட்டுவிட்டது. அதனால் ஹஃபிஸ்ஸுக்கு சிவப்பு அட்டை காண்பித்து அவரை ஆட்டத்தை விட்டு வெளியேற்றினார் நடுவர். ஆனால் ஹஃபிஸ் அவ்வளவு உயரமாகக் காலை உயர்த்தவில்லை என்றும் அவர் பந்தை உதைக்கவே அவ்வாறு செய்தார் என்பதே சக சிங்கப்பூர் ஆட்டக்காரர்கள், திரு சுந்தரம் ஆகியோரின் கூற்று.

பிலிப்பீன்ஸ் ஆட்டக்காரரை 'உதைத்ததற்காக' சிங்கப்பூரின் ஹஃபிஸ் சிவப்பு அட்டை பெற்ற சம்பவம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்