இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதை வெல்லப்போவது யார் என்பதை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது என்றும் அதை வெல்லக்கூடிய தகுதி ஐந்தாறு குழுக்களுக்கு உள்ளது என்றும் செல்சி குழுவின் நிர்வாகி ஆண் டோனியோ கொன்டி கூறியுள் ளார். நேற்று முன்தினம் டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர்ஸ் குழுவுடன் போராடி 2-1 என்ற கோல் கணக் கில் தனது குழு வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கொன்டி இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து வரும் ஆட்டங்க ளில் வெற்றி பெற்று வந்தால் குழுவின் தன்னம்பிக்கையும் வலுப்பெறும். இது முக்கியம் என்றும் அவர் கருத்துரைத்தார். செல்சி குழுவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு பேசிய ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகி மொரி சியோ பொச்செடினோ, "ஆட்டத்தில் எனது குழுவே மேலோங்கியிருந்தது. இருப்பி னும், பிற்பாதி ஆட்டம் தொடங் கிய சில நிமிடங்களிலேயே செல்சி போட்ட கோல் கடைசி வரை நீடித்தது," என்றார்.
ஸ்பர்ஸ் குழுவின் சன் ஹியுங் மின்னின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துகிறார் செல்சி குழுவின் விக்டர் மோசஸ் (வலது). படம்: ராய்ட்டர்

