மொகாலி: இந்தியா- இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மொகாலி மைதானத்தில் நடை பெற்று வருகிறது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து தனது ஆட்டத் தைத் தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 417 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி 134 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகப்படியாக ஜடேஜா 90 ஓட்டங்களும் அஸ்வின் 72 ஓட்டங்களும் ஜெயந்த் யாதவ் 55 ஓட்டங்களும் எடுத்தனர்.
மொகாலி டெஸ்ட்: திணறிய இங்கிலாந்து அணி
1 mins read

