தற்காப்பில் கவனம் செலுத்துவதாக கூறப்படுவதை மறுக்கும் சுந்தரமூர்த்தி

தற்காப்பில் கவனம் செலுத்துவதாக கூறப்படுவதை மறுக்கும் சுந்தரமூர்த்தி

1 mins read

சிங்கப்பூரின் லயன்ஸ் காற்பந்துக் குழு சுசுகி கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அது மட்டுமல்லாது, போட்டி ஆட்டங்களில் லயன்ஸ் அணிக்கு கிடைத்தது வெறும் ஒரு புள்ளி மட்டுமே. இதைத் தொடர்ந்து அணியின் பயிற்றுவிப்பாளரான சுந்தரமூர்த்தி தற்காப்பு ஆட்டத்தில் அதீத கவனம் செலுத்துவதாக குறைகூறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது சுசுகி கிண்ண ஆட்டங்களில் பங்கேற்றுவிட்டு மணிலாவிலிருந்து திரும்பியிருக் கும் திரு சந்தரமூர்த்தி இது குறித்து பதிலளித்துள்ளார்.