மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து லீக்கில் ரியால் மட்ரிட் குழுவின் செர்ஜியோ ரமோஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக கடைசி நிமிட கோல் போட்டு டொபோர்டிவோ லா கொருனா அணிக்கு எதிராக நேற்று நடை பெற்ற ஆட்டத்தில் ரியால் குழு 3=2 என்ற கோல் கணிக்கில் வெல்ல காரணமாக விளங்கினார். இதன்மூலம் தொடர்ச்சியாக 35 ஆட்டங்களில் தோல்வியையே கண்டிராத புதிய சாதனையை ரியால் மட்ரிட் குழு ஏற்படுத்தி யுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கிரிஸ்டியானோ ரொனால்டோ விளையாடவில்லை. எனினும் 1=2 என்று தோல்வி நிலையி லிருந்து கடைசி ஆறு நிமிடங் களில் அது மீண்டுவந்து லா லீகாவில் பார்சிலோனா அணியை ஆறு புள்ளிகள் அதிகமாகப் பெற்று தனன்குப் பின்னால் வைத் திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசி நேரத்தில் செர்ஜியோ ரமோஸ் கோல்; ரியால் புதிய சாதனை
1 mins read

