நியோன் (சுவிட்சர்லாந்து): ஐரோப்பிய சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்றில், கடந்த ஐந்து பருவங்களில் மூன்றாவது முறையாக ஆர்சனல்-பயர்ன் மியூனிக் குழுக்கள் மோதவிருக்கின்றன. தொடர்ந்து 17வது பருவமாக ஆர்சனல் குழு சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெற்றுள்ள போதும் இன்னும் ஒருமுறைகூட அக்குழு வால் வெற்றியை நெருங்க முடியவில்லை. அதிலும், முந்தைய ஆறு பருவங்களிலும் தொடர்ச்சியாக காலிறுதிக்கு முந்திய சுற்றில் அக்குழு தோற்று வெளியேறியது உச்சகட்ட சோகம். பார்சிலோனாவிடம் இருமுறை, பயர்ன் மியூனிக்கிடம் இருமுறை, மொனாக்கோ, ஏசி மிலான் ஆகிய குழுக்களிடம் தலா ஒருமுறை என அக்குழு மண்ணைக் கவ்வி ஏமாற்றம் கண்டது.
சாம்பியன்ஸ் லீக்: மீண்டும் பயர்ன்-ஆர்சனல்
1 mins read

