10வது ஐபிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அடுத்த பருவத்துக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக்கொள்ள வரும் 15ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கிடையே எட்டு அணி களும் பல வீரர்களைத் தக்க வைத்து கொண்டுள்ளது. தேவை யற்ற வீரர்களை விடுவித்தும் உள்ளது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக் கிறது. குஜராத் அணி 16 வீரர் களைத் தக்கவைத்துக் கொண்டு ஆறு வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களைத் தக்க வைத்ததுடன் 4 வீரர்களை விடு வித்துள்ளது. கோல்கத்தா அணி 14 வீரர்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்துள்ளது.
ஐபிஎல்; வீரர்களை மாற்ற வாய்ப்பு
1 mins read

