அசார் அலி இரட்டை சதம்

மெல்பர்ன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அசார் அலி ஆஸ்தி ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்து பல புதிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஒரே ஆண்டில் இரு இரட்டைச் சதங்களை அடித்த முதல் பாகிஸ்தான் வீரர், ஆஸ்திரேலி யாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீரர், மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வெளிநாட்டுத் தொடக்க ஆட்டக்காரர் ஆகிய பெருமைகள் அசாரைச் சென்றடைந்தன.

மழையால் அடிக்கடி தடைபட்ட 2வது போட்டியின் மூன்றாம் நாளான நேற்று ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 443 ஓட்டங்களை எடுத்த நிலையில் பாகிஸ்தான் தனது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. அசார் 205 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் ஜோஸ் ஹேசல்வுட், ஜாக்சன் பேர்ட் ஆகியோர் ஆளுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து பந்தடித்த ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமளித்தார் தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ ரின்சா. அவரைப் பத்து ஓட்டங்களில் வெளியேற்றினார் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சா ளர் யாசிர் ஷா.

சாதித்த உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கும் அசார் அலி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!