போர்ட் எலிசபெத்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 140 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை 'எல்பிடபிள்யூ' எனும் 'விக்கெட் முன்னால் கால்' முறையில் 10,000 பேர் ஆட்டமிழந்துள்ளனர். அம்முறையில் ஆட்டமிழந்து வெளியேறிய பத்தாயிரமாவது வீரர் எனும் பெருமையைப் பெற்றார் தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா. இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நுவான் பிரதீப் பந்துவீச்சில் அவர் 'எல்பிடபிள்யூ' ஆனார்.
இம்முறையில் அதிக தடவை ஆட்டம் இழந்தவர் என்ற வேண்டாப் பெருமைக்கு உரியவர் முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அவர் 63 முறை இப்படி ஆட்டமிழந்துள்ளார். அதே நேரத்தில், 'எல்பிடபிள்யூ' முறையில் அதிகம் பேரை ஆட்டமிழக்கச் செய்தவரும் ஓர் இந்தியரே. இந்திய அணியின் இப்போதைய பயிற்றுவிப்பாளரும் முன்னாள் சுழற்பந்து வித்தகருமான அனில் கும்ளே 'எல்பிடபிள்யூ' மூலம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.