லிவர்பூல் வழியில் ஸ்பர்ஸ்

லண்டன்: லிவர்பூல் குழு நேற்று முன்தினம் செய்து காட்டியதை நேற்று மீண்டும் நிகழ்த்திக் காட்டி யது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழு. ஸ்டோக் சிட்டி குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தின் தொடக்கத்தில் முன் னிலையை விட்டுத் தந்தபோதும் பின்னர் மீண்டெழுந்து நான்கு கோல்களைப் போட்டு வெற்றியைச் சுவைத்தது லிவர்பூல் குழு. அதுபோல, சௌத்ஹேம்டன் - ஸ்பர்ஸ் குழுக்களுக்கு இடையே நேற்று அதிகாலை நடந்த ஆட்டத் தின் இரண்டாம் நிமிடத்திலேயே கோலடித்து சௌத்ஹேம்டன் முன் னிலை பெற்றபோதும் பின்னர் ஸ்பர்ஸ் குழு அடுத்தடுத்து கோல் போட்டு 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் பதில் கோலடித்து எதிரணியின் முன்னிலையை ஈடுசெய்த ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் டெலி அலி, இறுதித் தருணத்திலும் ஒரு கோலடித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!