செரீனா தோல்வி

செரீனா தோல்வி

1 mins read
9fd93d5b-ad7c-41c1-9c96-ccea6e9413c4
-

ஆக்லாந்து: தரவரிசைப் பட்டியலில் தன்னைவிட 70 இடங்கள் பின்தங்கி இருக்கும் சக அமெரிக்க வீராங்கனையிடம் தோற்று அதிர்ச்சி அளித்தார் உலகின் 2ஆம் நிலை டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். நியூசிலாந்தில் நடந்து வரும் ஆக்லாந்து கிளாசிக் தொடரின் 2ஆம் சுற்று ஆட்டத்தில் 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தினார் 26 வயதான மேடிசன் பிரெங்கில். இந்த ஆட்டத்தில் செரீனா ஏராளமான தவறுகளை இழைத்தார். "உண்மையில், நான் எப்படி வென்றேன் என்று எனக்கே தெரியாது," என்றார் பிரெங்கிள். படம்: ஏஎப்பி