பதவியைத் துறந்தார் டோனி

ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மகேந்திர சிங் டோனி, 35 (படம்). ஆயினும், ஓர் ஆட்டக்காரரா கவும் விக்கெட் காப்பாளராகவும் அணியில் தொடர அவர் விரும்பு கிறார். 2014 டிசம்பர் 30ஆம் தேதி டெஸ்ட் அணித் தலைவர் பதவி யைத் துறந்த டோனி 60 டெஸ்ட், 199 ஒருநாள், 72 டி20 போட்டி களில் இந்திய அணியைத் தலை மையேற்று வழிநடத்தியுள்ளார். அதில் 27 டெஸ்ட், 110 ஒருநாள், 41 டி20 போட்டிகளில் இந்தியா வாகை சூடியது.

உலகளவில் அதிக அனைத் துலகப் போட்டிகளுக்கு (331) தலைவராகச் செயல்பட்டிருப்பது இவர்தான். இவரது தலைமையில் 2007ல் டி20 உலகக் கிண்ணம், 2011ல் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணம், 2013ல் சாம் பியன்ஸ் டிராஃபி என கிரிக்கெட் டின் எல்லா முக்கிய கிண்ணங் களையும் இந்திய அணி வென் றுள்ளது. அத்துடன், 2009ல் டெஸ்ட் அணிகளுக்கான தரவரி சையிலும் இந்தியா உச்சிக்குச் சென்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!