மன்ரோ அதிரடி சதம்; வீழ்ந்தது பங்ளாதேஷ்

வெலிங்டன்: கோலின் மன்ரோ அதிரடியாகப் பந்தடித்து சதமடிக்க, 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் 47 ஓட்ட வித்தியாசத்தில் நியூசி லாந்து பங்ளாதேஷை வென்றது. இதன்மூலம் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அவ்வணி 2-0 எனக் கைப்பற்றியது. லூக் ரோங்கி முதல் பந்தி லேயே ஆட்டமிழக்க, 46 ஓட்டங் களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது நியூசிலாந்து.

ஆயினும், 4வது விக்கெட்டுக்கு மன்ரோவும் (101) டாம் புரூசும் (59*) சேர்ந்து 123 ஓட்டங்களைக் குவிக்க, 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து ஏழு விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை எடுத்தது. இலக்கை விரட்டிய பங்ளா தேஷ் அணியின் ஷபிர் ரகுமான் (48), சௌம்ய சர்க்கார் (39) ஆகியோர் தவிர வேறு யாரும் நிலைத்து ஆடாததால் அந்த அணி 18.1 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

54 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஏழு சிக்சர் உட்பட 101 ஓட்டங்களை விளாசிய நியூசி. வீரர் கோலின் மன்ரோ (இடது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!