கோஹ்லிக்குத் தலைவர் பதவி

மும்பை: டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்துவரும் விராத் கோஹ்லி, இனி ஒருநாள், டி20 போட்டிகளிலும் அணித் தலைவராகச் செயல்படுவார். டெஸ்ட் தொடரை 0-4 எனப் பறி கொடுத்தபின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாடு திரும்பிய இங்கிலாந்து அணி, மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக மீண்டும் இந்தியா செல்கிறது. இதையடுத்து, அந்தப் போட்டிகளுக் கான இந்திய அணி விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது.

ஒருநாள், டி20 போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்த மகேந்திர சிங் டோனி, இருவகைப் போட்டிகளுக்கான அணிகளிலும் ஓர் ஆட்டக்காரராக இடம்பெற்றுள்ளார். அதேபோல, 35 வயது யுவராஜ் சிங்கும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். அதிரடி பந்தடிப்புக்குப் பெயர்போன இளம் ஆட்டக்காரரும் விக்கெட் காப்பாள ருமான 19 வயது ரிஷப் பன்ட் டி20 அணியில் அறிமுக வீரராகச் சேர்க்கப் பட்டுள்ளார். இம்மாதம் 15, 19, 22ஆம் தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் 26, 29, பிப்ரவரி 1ஆம் தேதிகளில் டி20 போட்டிகளும் நடக்கவிருக்கின்றன.

ஒருநாள் போட்டிகளுக்கான அணி: கோஹ்லி (அணித்தலைவர்), கே.எல்.ராகுல், ‌ஷிகர் தவான், டோனி, மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், யுவராஜ் சிங், அஜின்கிய ரகானே, ஹார்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ். டி20 அணி: கோஹ்லி (அணித்தலைவர்), ராகுல், மந்தீப் சிங், டோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பன்ட், ஹார்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, யுஸ்வேந்திர சகல், மனிஷ் பாண்டே, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஆ‌ஷிஷ் நெஹ்ரா.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியும் (இடது) இந்நாள் தலைவர் விராத் கோஹ்லியும். கோப்புப்படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!