சிட்டி கோல் மழை; மூழ்கியது வெஸ்ட் ஹேம்

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் ஹேம் குழுவை 5=0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி பந்தாடியுள்ளது. இந்த வெற்றியின் விளைவாகப் போட்டியின் நான்காவது சுற்றுக்கு சிட்டி தகுதி பெற்றுள்ளது. படுதோல்வி அடைந்த வெஸ்ட் ஹேம் போட்டியிலிருந்து வெளி யேறியது. இதுவே எஃப்ஏ கிண்ணப் போட்டியில் சொந்த விளையாட்டரங்கத்தில் வெஸ்ட் ஹேம் சந்தித்துள்ள ஆக மோச மான தோல்வி. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சிட்டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை எடுத்த யாயா டோரே பந்தை வலைக்குள் அனுப்பி சிட்டியின் கோல் வெள்ளத்தைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொர்ந்து, அதிரடி யாக விளையாடிய சிட்டி பல தாக்குதல்களை நடத்தி எதிரணி யைத் திக்குமுக்காட வைத்தது. இந்நிலையில், ஆட்டத்தைச் சமன் செய்ய வெஸ்ட் ஹேமுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டார் சோஃபியேன் ஃபெகோலி. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் வெஸ்ட் ஹேமின் ஹார்வர்ட் நோர்ட்வேட் சொந்த கோல் போட்டார்.

சிட்டியின் செர்கியோ அகுவேரோ (இடது) அனுப்பும் பந்து வலைக்குள் செல்ல அதைத் தடுக்க முடியாமல் தவிக்கும் வெஸ்ட் ஹேம் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!