சிட்னி டெஸ்ட்: ஆஸி. வெற்றி

சிட்னி: ஆஸ்திரேலியா= பாகிஸ் தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வாகை சூடியுள்ளது. ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்சில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 538 ஓட்டங்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 315 ஓட்டங்கள் எடுத்தது. 223 ஓட்டங்கள் முன்னிலையில் ஆடிய ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட் டுகள் இழப்புக்கு 241 ஓட்டங்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 465 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.

இரண்டாவது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்று முன் தினம் நான்காவது நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங் கள் எடுத்து இருந்தது. நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 80.2 ஓவர்களில் 244 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் சர்பிராஸ் அகமது அதிகபட்சமாக 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக் காமல் இருந்தார். ஆஸ்திரேலியாவின் ஹேசல் வூட், ஸ்டீவ் ஒகிபி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் நேதன் லயன் இரண்டு விக்கெட்டு களையும் சாய்த்தனர்.

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின் விக்கெட் சாய்ந்ததைக் கொண்டாடும் ஆஸ்திரேலியாவின் ஜாஷ் ஹேசல்வூட் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!