249 கோல்கள்: சாதனையைச் சமன் செய்த வெய்ன் ரூனி

மான்செஸ்டர் யுனைடெட்டின் நட்சத்திர ஆட்டக்காரரான வெய்ன் ரூனி யுனைடெட்டுக் காகத் தனது 249வது கோலைப் போட்டதன் மூலம் யுனைடெட்டின் வரலாற்றுப் புத்தகங்களில் அழியா இடத்தைப் பிடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற எஃப்ஏ கிண்ண ஆட்டம் ஒன்றில் யுனைடெட் குழு ரெடிங் குழுவை 4-0 என்ற கோல் கானக்கில் வீழ்த்தியது. ஆனால் அந்த ஆட்டத்தில் பெரிதாக முத்திரை பதித்தவர் ரூனிதான். இதற்கு முன்பு அந்த சாதனையை நிகழ்த்தியவர் யுனைடெட்டின் வாழும் சகாப்தம் என கருதப்படும் சர் பாபி சார்ல்டன். லீக், சாம்பியன்ஸ் லீக், எஃப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம், இதர ஆட்டங்கள் என மொத்தம் 543 ஆட்டங்களில் ரூனி யுனைடெட்டுக்காக 249 கோல்களைப் போட்டுள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்து அணியின் ஆக அதிகமான கோல்கள் போட்டவர் எனும் சர் பாபி சார்ல்டனின் சாதனை முறியடித்தவரும் ரூனிதான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!