கோஹ்லி: டோனியுடன் புரிந்துணர்வு உண்டு

தலைவர் பொறுப்பு எனும் சுமை இல்லாமல் இருக்கும் டோனி அணியில் இடம்பெற்றிருப்பது இந்திய அணிக்கும் தமக்கும் நன்மையே அளிக்கும் என்று இந்திய அணியின் தற்போதைய அணித் தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவராகப் பொறுப் பேற்று அண்மையில் டி20, ஒரு நாள், என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளின் இந்திய அணித் தலைவராக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். "டோனியின் வழிகாட்டுதல் இருப்பது,

அணியின் தலைவரான எனக்கு நன்மையே. ஆனால் இனிமேல் டோனியால் எந்த நெருக்கடியும் மன அழுத்தமும் இல்லாமல் கிரிக்கெட் விளையாட முடியும் என்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார் கோஹ்லி. டோனி தொடக்கத்தில் மிகவும் விறுவிறுப்பான, வேகமான ஆட்டத்துக்குப் பெயர் போனவர் என்றும் ஆனால் தலைவர் பொறுப்பு ஏற்றவுடன் அந்த பொறுப்புணர்ச்சியே வேகத்தைக் குறைத்துவிடும் என்று கூறிய கோஹ்லி இனிமேல் டோனிக்கு அந்தப் பொறுப்பும் அதனால் உருவாகும் நெருக்கடியும் இருக்காது என்றார். 2008ஆம் ஆண்டு இந்திய அணியில் அடி எடுத்து வைத்த கோஹ்லி, 9 ஆண்டுகள் கழித்து 2017ல் இந்திய அணித் தலைவராகவும் ஆகியுள்ளார்.

ஆட்டத்தின்போது வியூகத்தைப் பற்றி பேசும் டோனி (இடது), இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!