திடலில் ஓடிவந்து டோனி காலில் விழுந்த ரசிகர்

இந்தியாவில் ஆயிரமாயிரம் ரசி கர்களைக் கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் டோனி தலைமை யில் இந்திய அணி மும்பை திடலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொண்டது. அது அணித் தலைவராக டோனி கலந்து கொண்ட கடைசிப் போட்டி. வீரர் டோனி மீது ரசிகர்கள் எந்த அளவுக்கு அன்பும் நம்பிக் கையும் மரியாதையும் வைத்து இருக்கிறார்கள் என்பது அந்த இங்கிலாந்து லெவன் - இந்தியா ஏ அணிகள் விளையாட்டின் போது தெரியவந்தது. ஆட்டத்தைப் பார்க்க இலவச அனுமதி இருந்ததால் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இந்தியா முதலில் பந்தடித்தது.

இந்திய வீரர் ராயுடு 41வது ஓவரில் சதம் அடித்து ஆட்டம் இழந்ததை அடுத்து டோனி மட்டையுடன் களம் இறங்கினார். ரசிகர்கள் டோனி டோனி என்று எழுப்பிய ஒலி எங்கும் எதிரொலித்தது. இந்த நேரத்தில், யாருமே எதிர் பாரா வகையில் தீவிர ரசிகர் ஒருவர் அதிரடியாக திடலுக்குள் ஓடிவந்து டோனியின் காலில் விழுந்தார். திடலில் அந்த ரசிகரை கண்ட டோனி அவருக்கு அன் புடன் கைகொடுக்க முன்வந்தார். இதைக் கண்ட திடல் ஊழியர் கள் ரசிகரை வெளியேற்றினர். இச்சம்பவத்தைக் காணொளியாக ஏராளமானவர்கள் கண்டனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய தலைவர் டோனி 68 ஓட்டங்கள் குவித்தார்.

திடீரென்று திடலுக்குள் ஓடிவந்து டோனி காலில் விழும் ரசிகர். படம்: இந்திய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!