வலுவான நிலையில் மேன்யூ

மான்செஸ்டர்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டி யின் இறுதி ஆட்டத்தை மான் செஸ்டர் யுனைடெட் நெருங்கி உள்ளது. இப்போட்டியின் அரையிறுதிக் கான முதல் ஆட்டத்தில் ஹல் சிட்டியை 2=0 எனும் கோல் கணக்கில் யுனைடெட் வீழ்த்தி ஒட்டுமொத்த கோல் அடிப்படை யில் முன்னிலை வகிக்கிறது. யுனைடெட் குழுவுக்காக தமது 250வது கோல் சாதனையை வி ர ட் டி க் கொ ண் டி ரு க் கு ம் வெய்ன் ரூனி கோல் போடுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இந்த ஆட்டத்தில் ரூனியால் புதிய சாதனையைப் படைக்க முடியாமல் போனது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் வலை நோக்கி அவர் அனுப்பிய பந்து நூலிழை யில் அதன் இலக்கைத் தவறியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து யுனைடெட் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தியது. ஹல் சிட்டியின் கோல்காப்பாளர் விழிப்புடன் இருந்து யுனை டெட்டின் பல கோல் வாய்ப்பு களைத் தடுத்து நிறுத்தினார். இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.

யுனைடெட்டின் இரண்டாவது கோலைப் போடும் ஃபெலைனி (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!