லிவர்பூல் அதிர்ச்சி தோல்வி

சௌத்ஹேம்டன்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நேற்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்று அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செளத்ஹேம்டனிடம் லிவர் பூல் அணி 0=1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி- யடைந்தது. சௌத்ஹேம்டனின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடந்த 16 ஆட்- டங்களில் செளத்ஹேம்டனுக்கு கோல் எதுவும் போடாத நேதன் ரெட்மண்ட் என்பவர் தமது அணிக்காக ஆட்டத்தின் 20ஆம் நிமிடத்தில் கோல் போட்டு லிவர்- பூலுக்கு சங்கடத்தைக் கொடுத் தார்.

ஆனால் ரெட்மண்ட் இதை மட்டும் செய்யவில்லை. அவர் மேற்கொண்ட மேலும் பல முயற்சிகள் கோல்களாக மாறி யிருந்தால் லிவர்பூலின் பாடு தர்மசங்கடமாக மாறியிருக்கும். தற்போதைய நிலையில் லிவர்பூல் தனது சொந்த மைதான மான ஆன்ஃபீல்டில் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டத்தில் செளத்ஹேம்டனைவிட இரண்டு கோல்கள் அதிகமாக போடும் பட்சத்தில் அது இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுவிடும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!