வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை; புலம்பும் மொரின்யோ

மான்செஸ்டர்: லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் போட கிடைத்த வாய்ப்பு களைத் தமது வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று மான்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகி குறைப்பட்டுக் கொண்டார். நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் யுனைடெட் குழுவும் லிவர்பூலும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் கோல் போட கிடைத்த அருமையான வாய்ப்பை யுனைடெட்டின் பால் பொக்பா கோட்டைவிட்டார். அதுமட்டுமல்லாது, ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் சொந்த பெனால்டி எல்லையில் அவர் இருந்தபோது பந்தைக் கையால் தொட்டதால் லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

பெனால் டியை எடுத்த ஜேம்ஸ் மில்னர் பந்தை வலைக்குள் சேர்த்து லிவர்பூலை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். ஆனால் ஆட்டம் முடிய ஆறு நிமிடக்கள் இருந்தபோது ஸ்லாட்டான் இப்ராஹமோவிச் யுனைடெட்டுக்கான கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தார். இந்தப் பருவத்தில் யுனைடெட் இதுவரை 32 கோல்களைப் போட்டுள்ளது. அதில் ஏழு கோல்கள் மட்டும் ஆட்டத்தின் முதல் 35 நிமிடங்களில் போடப்பட்டவை. ஆட்டத் தின் தொடக்கத்திலேயே கிடைக்கும் வாய்ப்புகளைத் தமது வீரர்கள் பயன்படுத்த தவறவிடுகின்றனர் என்று மொரின்யோ ஏமாற்றம் தெரிவித்தார்.

கோல் வலையை நோக்கி பந்தை அனுப்பும் யுனைடெட் குழுவின் நட்சத்திர வீரர் ஸ்லாட்டன் இப்ராஹி மோவிச் (நடுவில்). கடுமையாக போராடி இரு குழுக்களும் சமநிலை கண்டன. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!