‘பட்டத்துக்கான போட்டியில் சிட்டி இனி இல்லை’

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லிக் காற்பந்துப் போட்டி பட்டத்துக்கான போட்டியில் சிட்டி இனி இல்லை என்று குமுறுகிறார் அதன் நிர்வாகி பெப் கார்டியோலா. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் எவர்ட்டனிடம் சிட்டி 4-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. கடந்த எட்டு லீக் ஆட்டங்களில் இதுவே சிட்டி சந்தித்துள்ள நான் காவது தோல்வியாகும். அதுமட்டு மல்லாது, லீக் ஆட்டம் அடிப் படையில் இந்தத் தோல்வி ஒரு குழுவின் நிர்வாகியாக இருந்து கார்டியோலா சந்தித்துள்ள ஆக மோசமானதாகும். இந்தத் தோல்வியை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கார்டியோலா, இப்பருவத்தில் சிட்டி லீக் பட்டத்தைக் கைப்பற்றாது என்று மிகுந்த ஏமாற்றத்துடன் தெரிவித்தார். லீக் பட்டியலில் முன்னிலை வகிக்கும் செல்சியைவிட சிட்டி பத்து புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ள நிலையில் லீக் பட்டத் துக்கான போட்டியில் இனி சிட்டி இல்லை என்று கார்டியோலா கூறி னார்.

லீக் பட்டியலைப் பற்றி இனி கவலைப்படாமல் அடுத்த ஆட்டங் களில் கவனம் செலுத்துமாறு தமது வீரர்களிடம் கூறி வருவதாக கார்டியோலா தெரிவித்தார். "பருவம் முடிந்த பிறகு எங்களது நிலை குறித்து ஆராய்ந்து கலந்துரையாடி ஒரு முடிவுக்கும் வருவோம். என்றார் கார்டியோலா. கோல் போட கிடைத்த பொன்னான வாய்ப்புகளைத் தமது ஆட்டக்காரர்கள் நழுவவிட்டது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

முதல்பாதி ஆட்டத்தில் பந்தை வலைக்குள் சேர்த்து தமது குழுவின் கோல் மழையைத் தொடங்கி வைக்கும் ரொமேலு லுக்காக்கு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!