விராத் கோஹ்லி: டெண்டுல்கருடன் என்னை ஒப்பிடுவது சரியல்ல

முதல் ஒருநாள் போட்டியில் விராத் கோஹ்லி சதம் அடித்து முத்திரை பதித்தார். 177வது ஒருநாள் போட்- டியில் அவர் விளையாடி 27வது சதத்தைப் பதிவு செய்தார். 2வது இன்னிங்சில் அதாவது சேசிங்கில் விராத் கோஹ்லி 17 செஞ்சுரியை எடுத்து டெண்டுல்கர் சாதனை- யைச் சமன் செய்தார். இதில் வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதம் (15) எடுத்த டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். விராத் கோஹ்லிக்குத் தற்போது 28 வயதுதான் ஆகிறது. இதே திறமையுடன் தொடர்ந்து 10 ஆண்டுகள் விளையாடினால் அவர் டெண்டுல்கரின் அனைத்துச் சாதனைகளையும் தகர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது சாத்தியமில்லை என்று விராத் கோஹ்லி கிரிக்கெட் வாரிய இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். "கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கருடன் என்னை ஒப்பிட்டு வருவது எந்த- விதத்திலும் சரியில்லை. அவரைப் போன்று 24 ஆண்டு காலம் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் என்னால் விளையாட இயலாது. 100 சதம் அடிக்க முடியாது. அவரது சாதனைகள் நம்ப முடியாதவை.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியைச் சக வீரர்களுடன் கொண்டாடும் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!