வரி மோசடி: ஒப்புக்கொண்ட அலெக்சிஸ் சாஞ்செஸ்

பார்சிலோனா: ஆர்சனல் குழு- வில் முன்னணி வீரராகத் திக- ழும் அலெக்சிஸ் சாஞ்செஸ் (படம்) பார்சிலோனா குழுவிற்குத் தாம் விளையாடியபோது ஸ்பெயின் நாட்டில் 983,443 யூரோக்கள் (S$1.49மில்லியன்) அளவுக்கு வரி மோசடி செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அவருடைய இந்த ஒப்புதல் வாக்குமூலம் அவருக்கு ஸ்பானிய அதிகாரிகள் அபராதம் விதிப்பதற்கு அதிகாரமளிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட வாய்ப்பு உள்ளபோதிலும் அவர் சிறை- வாசம் அனுபவிக்க வேண்டி யிருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனிலிருந்து காணொளி வழி சாட்சியமளித்த சாஞ்செஸ், தமது வரி பற்றிய தகவல்களில் தவறு நேர்ந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்டதுடன் அதைத் தாம் ஸ்பெயின் நாட்டு அதிகாரி களுடன் சரிசெய்து விட்டதாகவும் விளக்கினார். 2012=2013ஆம் ஆண்டுக ளில் அவர் சமர்ப்பித்த வரி தொடர் பான அறிக்கைகளில் விளம் பர உரி மைகளில் அவருக்- குக் கிடைத்த லாபத் தொகையை அவர் தெரி விக்காததை ஒப்புக் கொண்டதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறு கிறது. ஸ்பெயின் நாட்டில் ஈராண்டு களுக்கும் குறைவான சிறைத் தண்டனையைப் பொதுவாக சிறையில் கழிக்க வேண்டியிராது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!