சேம் அலர்டைசின் கிறிஸ்டல் பேலஸ் வெற்றி

லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் போல்ட்டனை 2-1 எனும் கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் வீழ்த்தியுள்ளது. அண்மையில் இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் நிர்வாகிப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சேம் அலர்டைசின் தலைமையில் கிறிஸ்டல் பேலஸ் குழு எஃப்ஏ கிண்ணப் போட்டியில் நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு கிறிஸ்டல் பேலஸ் குழுவின் நிர்வாகிப் பதவியிலிருந்து எலன் பார்டு நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சேம் அலர்டைஸ் அப்பதவியை ஏற்றார். கிறிஸ்டல் பேலஸ் குழுவின் நிர் வாகியாக அலர்டைஸ் பொறுப் பேற்றதிலிருந்து தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் அக்குழு தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், போல்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் பேலஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் 48வது நிமிடத் தில் போல்ட்டன் கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆனால் துண்டுவிடாமல் விளையாடிய பேலஸ் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டு வாகை சூடியது.

கிறிஸ்டல் பேலசின் முதல் கோலைப் போடும் பென்டக்கே (நடுவில்). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!