முதல் சுற்றில் ஜோக்கோவிச் வெற்றி

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் நடப்பு வெற்றியாளரான நோவாக் ஜோக்கோவிச் (செர்பியா), ஸ்பெயின் வீரர் ஃபெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் 6-1, 7-6 (7/4), 6-2 என்ற நேர் செட்கணக்கில் ஜோக்கோவிச் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியப் பொது விருது பட்டத்தை ஜோக்கோவிச் ஐந்து முறை வென்றுள்ளார்.

உலகின் முதல்நிலை வீராங்கனையும் நடப்பு வெற்றியாளருமான கெர்பர் (ஜெர்மனி) இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சகநாட்டைச் சேர்ந்த கரீனா விதோப்டை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை கெர்பர் 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். ஆனால் இரண்டாவது செட்டில் கரீனா சிறப்பாக விளையாடி 7-6 (7-3) என்ற கணக்கில் கைப்பற்றினார். கடைசி செட்டை கெர்பர் 6-3 என்ற கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

13ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றில் ஸ்டெபானியை (சுவிட்சர்லாந்து) சந்தித்தார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார். இவா கார்லோவிச் (குரோவே‌ஷியா)- ஹோரோசியா ஜிபல்லோஸ் (அர்ஜெண்டினா) ஆகிய வீரர்கள் இடையிலான மோதல் 5 மணி 15 நிமிடங்களுக்கு நடந்தது. இறுதியில் கார்லோவிச் வெற்றி பெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!