லண்டன்: தாக்குதல் ஆட்டக் காரர் மெம்ஃபிஸ் டிபாயை பிரஞ்சு லீக்கில் விளையாடும் லியோனுக்கு விற்க மான் செஸ்டர் யுனைடெட் முடிவு செய்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாலந்து குழுவுக்காக விளையாடும் 22 டிபாயுக்கு 16 மில்லியன் பவுண்ட் விலை பேசப்பட்டுள்ளது. இந்தத் தொகை 21.7 மில்லியன் பவுண்ட் வரை உயரலாம். யுனைடெட்டுக்காக 53 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள டிபாய், அக்குழுவுக்காக ஏழு கோல்களைப் போட்டுள்ளார்.
மெம்ஃபிஸ் டிபாயை லியோனுக்கு விற்க முடிவு
1 mins read

