மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டிக்கான அரையிறுதிக்கு அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்றுள்ளார். காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யா வைச் சேர்ந்த அனஸ்டேசியாவுடன் வீனஸ் மோதினார். முதல் செட்டை வீனஸ் 6=4 என்ற கணக்கில் எளிதில் வென்றார். இரண்டாவது செட்டில் அனஸ்டேசியா மிகுந்த முனைப் புடன் விளையாடினார். இதனால் 6=6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கருக்குச் சென்றது. இதில் வீனஸ் 7-6 என்ற கணக்கில் அந்த செட்டையும் வென்று அரையிறுதிக்கு முன் னேறினார். இறுதியில், 36 வயது வீனஸ் 6-4, 7-6 எனும் செட் கணக்கில் வாகை சூடி அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கார்பின் முகுருசா அதிர்ச்சிகரமாகத் தோற்றார். புதுமுக வீராங்கனையான கோ கோ வான்ட்வெக் (அமெரிக்கா) 6=4, 6=0 என்ற நேர்செட் கணக்கில் முகுருசாவை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்சிலாம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இன்று நடைபெறும் காலிறுதியில் ரஃபயேல் நடால் கனடாவின் ரோனிச்சுடன் மோதுகிறார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதியில் வீனஸ்
1 mins read

