அரையிறுதியில் கெமரூன், புர்கினா ஃபாசோ

அரையிறுதியில் கெமரூன், புர்கினா ஃபாசோ

1 mins read

லிப்ரெவில்: ஆப்பிரிக்க நாடு களுக்கான காற்பந்துப் போட்டி யின் அரையிறுதிச் சுற்றுக்கு கெமரூனும் புர்கினா ஃபாசோவும் தகுதி பெற்றுள்ளன. கெமரூனும் செனகலும் மோதிய காலிறுதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்தது. அதனைத் தொடர்ந்து, பெனால்டி முறைப்படி ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதில் கெமரூன் 5=4 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. செனகலின் நட்சத்திர வீரர் சாடியோ மானே பந்தை வலைக் குள் சேர்க்கத் தவறியதே கெம ரூனுக்கு வெற்றியைத் தந்தது. மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் புர்கினா ஃபாசோ 2-0 எனும் கோல் கணக்கில் துனிசியாவைத் தோற்கடித்தது.