மெல்பர்ன்: உலக டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றை யர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஃபெடரர், நடால் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டி முடிவுகளின் அடிப்படையில் வீ ர ர் = வீ ரா ங் க னை க ளி ன் தரவரிசைப் பட்டியலை அனைத் துலக டென்னிஸ் சங்கம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் போட்டியில் கிண்ணம் ஏந்திய 35 வயது அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (7,780 புள்ளிகள்) ஓர் இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நான்காவது சுற்றில் தோல்வி யைத் தழுவிய ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (7,715) ஓர் இடம் சரிந்து இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இறுதிப் போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங் கனை வீனஸ் வில்லியம்ஸ் 17வது இடத்திலிருந்து 11வது இடத்துக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சானியா மிர்சா (6,525) இரண் டாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஆண்கள் ஒற்றையர் தரவரிசை யில் ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியின் நான்காவது சுற்றில் தோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே (11,540) முதலிடத்திலும் இரண் டாவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்ட செர்பியா வீரர் ஜோக் கோவிச் (9,825) இரண் டாவது இடத்திலும் தொடர் கின்றனர். அரையிறுதியை எட்டிய சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா (5,695) ஓர் இடம் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித் துள்ளார்.

