சுவர்ப்பந்து: பட்டத்தைக் கைப்பற்றிய இந்திய அணி

சுவர்ப்பந்து: பட்டத்தைக் கைப்பற்றிய இந்திய அணி

1 mins read

ஹாங்காங்: ஆசிய ஜூனியர் சுவர்ப்பந்துப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி மாபெரும் வெற்றியாளர் பட்டத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. இப்போட்டி ஹாங்காங்கில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதி யது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த 18 வயது வேலவன் செந்தில்குமார் 12-10, 11-0, 11-2 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஓங் சாய் ஹங்கைப் புரட்டி எடுத்தார். இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் அபய் சிங் 10-12, 7-11, 11-5, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் போராடி மலேசி யாவின் டேரன் ராகுலை தோற் கடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2=0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கிண்ணம் ஏந்தியது.