ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கான சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியிலிருந்து அனுபவ ஆட்டக்காரர் பைஹாக்கி கைசான், 33, நீக்கப்பட்டுள்ளார். இது பற்றி அணியின் பயிற்றுவிப்பாளர் வி.சுந்தரமூர்த்தி கூறுகையில், "தேசிய அணிக்காக நீண்டகாலமாக விளையாடி வந்திருக்கும் பைஹாக்கியின் கடப்பாட்டை, சேவையை மெச்சுகிறோம். இருப்பினும், ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டங்களுக்கான சிங்கப்பூர் அணியில் அவருக்கு இடமில்லை," என்றார். பைஹாக்கி 129 போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இருக்கிறார்.
பைஹாக்கி கைசான் நீக்கம்
1 mins read

