வெற்றிப் பாதைக்குத் திரும்ப லிவர்பூல் தீவிர முயற்சி

வெற்றிப் பாதைக்குத் திரும்ப லிவர்பூல் தீவிர முயற்சி

1 mins read

லிவர்பூல்: இந்த ஆண்டில் இது வரை பத்து ஆட்டங்களில் பங்கேற் றுள்ளபோதும் ஓர் ஆட்டத்தில் மட்டுமே வென்றுள்ளது லிவர்பூல் காற்பந்துக் குழு. ஆதலால், இன்று பின்னிரவில் சொந்த ஆன்ஃபீல்ட் அரங்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு விற்கு எதிராக நடக்கவிருக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட் டத்தில் வென்று மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப லிவர்பூல் வீரர்கள் முழு முனைப்புடன் உள் ளனர். "நிர்வாகி யர்கன் க்ளோப்பிற் காகவும் லிவர்பூல் ரசிகர்களுக் காகவும் மிகச் சிறப்பான செயல் பாட்டை வெளிப்படுத்த கடன்பட் டுள்ளோம். சில காலமாக சொந்த அரங்கில் நாங்கள் வெற்றி பெற வில்லை. அதனை இன்று சரி செய்யவேண்டியுள்ளது.