வரலாற்றில் இடம்பிடித்த விராத் ஹைதராபாத்: அடுத்தடுத்து நான்கு

வரலாற்றில் இடம்பிடித்த விராத் ஹைதராபாத்: அடுத்தடுத்து நான்கு

1 mins read
0aaa9f62-4c1d-40f9-ba14-dda71223eb03
-

டெஸ்ட் தொடர்களில் இரட்டைச் சதமடித்த முதல் கிரிக்கெட் வீரர் எனும் சாதனையைப் படைத்திருக்கிறார் இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லி (படம்). கடந்த ஆண்டு ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதன்முறையாக இரட்டைச் சதம் விளாசிய கோஹ்லி, பின் அக்டோபரில் நியூசிலாந்து, டிசம் பரில் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரா கவும் அந்த மைல்கல்லைக் கடந்தார். இந்நிலையில், ஹைதராபாத்தில் பங்ளாதேஷ் அணிக்கெதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிலும் 200 ஓட்டங்களை அவர் கடந்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் சதம் கடந்தது இது 16வது முறை. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடு வதற்காக இந்தியா சென்றுள்ளது பங்ளா தேஷ் அணி. இந்திய மண்ணில், இந்திய அணிக்கு எதிராக அவ்வணி டெஸ்ட் போட்டியில் ஆடுவது இதுவே முதல் முறை.