'ஆர்சனல் குழுவைவிட்டு நிர்வாகி வெங்கர் வெளியேறும் நேரம் நெருங்கிவிட்டது'

'ஆர்சனல் குழுவைவிட்டு நிர்வாகி வெங்கர் வெளியேறும் நேரம் நெருங்கிவிட்டது'

1 mins read
e2881671-9938-4b81-a92b-2835bd7d00f3
-

லண்டன்: கடந்த 21 ஆண்டுகளாக ஆர்சனல் காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக இருக்கும் ஆர்சன் வெங்கர், 67, அக்குழுவுடனான தமது பயணத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதாகக் கருதுகிறார் என்று முன்னாள் ஆர்சனல் வீரர் இயன் ரைட் தெரிவித்துள்ளார். இந்தப் பருவத்துடன் ஆர்சனல் உடனான வெங்கரின் ஒப்பந்தம் முடிவடைகிறது. அத்துடன், பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் செல்சியைவிட ஆர்சனல் குழு 12 புள்ளிகள் பின்தங்கி இருக்கிறது. இதனால் வெங்கர் ஆர்சனலுடன் தொடர்ந்து பணியாற்றுவதில் ஐயம் எழுந்துள்ளது.