பங்ளாதே‌ஷின் கதையை முடித்த இந்தியா

பங்ளாதே‌ஷின் கதையை முடித்த இந்தியா

1 mins read
e9eb2b79-239a-49b8-b977-ac6795c52ec7
-

ஹைதராபாத்: பங்ளாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா=பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தியா அதன் முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 687 ஓட்டங்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. அதனைத் தொடர்ந்து அதன் முதல் இன்னிங்சைத் தொடங்கிய பங்ளாதேஷ் 388 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. 'ஃபாலோ ஆன்' கொடுக்காமல் 299 ஓட்டங்கள் முன்னி லையுடன் இரண்டாவது இன்னிங்சை இந்தியா விளையாடியது.

பங்ளாதேஷ் வீரரின் மட்டையிலிருந்து புறப்பட்டு வரும் பந்தைப் பிடித்து விக்கெட்டைச் சாய்க்கும் இந்திய வீரர்கள். படம்: ஏஎஃப்பி