கடந்த கால தோல்விகளுக்கு பதிலடி தர ஆர்சனல் முனைப்பு

கடந்த கால தோல்விகளுக்கு பதிலடி தர ஆர்சனல் முனைப்பு

1 mins read

மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆர்சனல் குழு காலிறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறியது. அதில் 2013, 2014 என இரு முறை அக்குழு ஜெர்மன் ஜாம்ப வான் பயர்ன் மியூனிக்கிடம் மண்ணைக் கவ்வியிருந்தது. இந்நிலையில், ஆர்சனலின் போதாத காலமோ என்னவோ, இம்முறையும் அக்குழு காலிறு திக்கு முந்திய சுற்றில் பயர்ன் குழுவை எதிர்த்தாடுகிறது. இதன் முதல் சுற்று ஆட்டம் நாளை அதிகாலை 3.45 மணிக்கு மியூனிக்கில் நடக்கவிருக்கிறது.