துணைப் பயிற்றுவிப்பாளராக முகம்மது கைஃப்

துணைப் பயிற்றுவிப்பாளராக முகம்மது கைஃப்

1 mins read

ராஜ்கோட்: அடுத்த ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருக்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் விளையாடும் குஜராத் லயன்ஸ் அணியின் துணைப் பயிற்றுவிப் பாளராக முன்னாள் இந்திய வீரர் முகம்மது கைஃப், 36, நியமிக்கப் பட்டுள்ளார். இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளிலும் 125 ஒருநாள் போட்டிகளிலும் கைஃப் விளையாடி இருக்கிறார். முதலாவது ஐபிஎல் தொடரில் பட்டம் வென்ற ராஜஸ் தான் ராயல்ஸ் அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். பின்னர் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களுக்காக அவர் விளையாடினார்.