மான்செஸ்டர்: நட்சத்திர ஆட்டக் காரர் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச் மூன்று கோல்களை அடிக்க, யூரோப்பா லீக் காற்பந்தில் '32 அணிகள்' சுற்றின் முதல் ஆட்டத் தில் மான்செஸ்டர் யுனைடெட் குழு 3-0 என்ற கணக்கில் பிரான்சின் செயின்ட் எட்டியன் குழுவை வீழ்த்தியது. இதனுடன் சேர்த்து பிஎஸ்ஜி குழுவின் முன்னாள் ஆட்டக்கார ரான இப்ராகிமோவிச், செயின்ட் எட்டியன் குழுவிற்கெதிராக 14 ஆட்டங்களில் 17 கோல்களைப் போட்டுள்ளார். அத்துடன், இந்தப் பருவத்தில் அவர் அடித்த கோல் களின் எண்ணிக்கையும் 23ஆக உயர்ந்தது.epaper.tamilmurasu.com.sg
யூரோப்பா லீக் காற்பந்து: மேன்யூ வெற்றி, ஸ்பர்ஸ் தோல்வி
1 mins read

