பார்சிலோனாவைக் காப்பாற்றிய மெஸ்ஸி

பார்சிலோனாவைக் காப்பாற்றிய மெஸ்ஸி

1 mins read

மட்ரிட்: ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டி ஆட்டம் ஒன்றில் லயனல் மெஸ்ஸி எடுத்த கடைசிக்கட்ட பெனால்டி பார்சிலோனாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. லீக் பட்டியலில் 17வது இடத்தில் உள்ள லெகானெஸ் குழுவுக்கு எதிராக பார்சிலோனா திணறியது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் 1=1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது தான் பார்சிலோனாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இம்மாதம் பார்சிலோனாவுக்குச் சோதனை மிகுந்ததாக அமைந் துள்ளது.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg