லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டிக் கான காலிறுதிப் போட்டியில் செல்சியும் மான்செஸ்டர் யுனை டெட்டும் சந்திக்கவிருக்கின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் வூல்வ்ஸ் குழுவை 2=0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு செல்சி தகுதி பெற்றது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஐந்தாவது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டும் பிளாக்பர்ன் ரோவர்ஸ் குழுவும் மோதின. இதில் யுனைடெட் 2=1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பிளாக்பர்ன் கோல் போட்டு முன்னிலை வகித்தது. துவண்டு விடாமல் விளையாடிய யுனைடெட் அடுத்த பத்து நிமிடங்களிலேயே ஆட்டத்தைச் சமன் செய்தது. யுனைடெட்டின் முதல் கோலைப் போடும் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்
'எஃப்ஏ கிண்ணத்தில் மட்டும் கவனம் செலுத்த முடியாது'
1 mins read
-

