லண்டன்: கடந்த 2006ஆம் ஆண்டு முதல் ஆர்சனல் காற் பந்துக் குழுவிற்காக விளையாடி வரும் இங்கிலாந்து ஆட்டக்காரர் தியோ வால்காட் அக்குழு சார்பில் 100 கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக்கொண்டுள்ளார். ஐந்தாம் நிலை தேசிய லீக்கில் விளையாடி வரும் சட்டன் யுனை டெட் குழுவிற்கெதிராக நேற்று அதிகாலை நடந்த எஃப்ஏ கிண்ண காலிறுதிக்கு முந்திய சுற்றில் ஆர்சனல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் லூக்காஸ் பெரெஸ், 55வது நிமிடத்தில் வால்காட் ஆகியோர் அந்த கோல்களைப் போட்டனர்.2017-02-22 06:00:00 +0800
வால்காட்டின் 100வது கோல்
1 mins read

