ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்

ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்

1 mins read
3a3b2cbf-e0cd-406a-9a2e-c84e67350ef9
-

சேலம்: பத்தாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழக வீரரான தங்கராசு நடராஜனை (படம்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மூன்று கோடி ரூபாய்க்கு வாங்கி வியப்பளித்துள்ளது. இஷாந்த் சர்மா, இர்ஃபான் பதான் போன்ற தேசிய அணிக் காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களை யாரும் சீண்டாத நிலையில் 26 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை வாங்க பல அணி களும் போட்டி போட்டன. ரூ.10 லட்சம் என்ற அடிப்படை ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தனக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றார் நடராஜன்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg