இன்று இந்தியா-ஆஸி. முதல் டெஸ்ட் போட்டி

இன்று இந்தியா-ஆஸி. முதல் டெஸ்ட் போட்டி

1 mins read

புனே: இந்தியா- ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடை யிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று புனேயில் நடை பெறுகிறது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளை யாடுவதற்காக இந்தியா வந்து உள்ளது. விராத் கோஹ்லி தலை மையிலான இந்திய அணி அண்மைய காலமாக டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இலங்கை (2-1), தென்னாப்பிரிக்கா (3-0), வெஸ்ட் இண்டீஸ் (2-0), நியூசிலாந்து (3-0), இங்கிலாந்து (4-0), பங்ளாதேஷ் (1-0) ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சி யாக ஆறு டெஸ்ட் தொடர்களை இந்தியா வென்றுள்ளது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் தொடரை வென்றது. மீதியுள்ள நான்கு தொடர்களைச் சொந்த மண்ணில் அது கைப்பற்றியது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg